2026 தேர்தலில் யாருடன் கூட்டணி..? “அது மட்டும் நிச்சயம் நடக்காது” தெறிக்கவிட்ட திருமாவளவன்..!!

By Soundarya on ஆனி 27, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தையை தற்போதே அரசியல் கட்சிகள் தீவிரமாக நடத்தி வருகின்றன. முன்னதாக அதிமுக, திமுக என்ற இரண்டு பெரிய ஆளுமை கட்சிகள் இருந்த நிலையில் தற்போது உச்ச நட்சத்திரம் விஜய் அவர்களும் கட்சி தொடங்கியுள்ளார் . இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதற்கிடையில் அரசியல் கட்சியினர் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் கூட்டணி குறித்து பேட்டியளித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், “2026 சட்டமன்ற தேர்தலில் பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் விசிக நிச்சயம் இடம்பெறாது . குறைவான தொகுதி அளித்தாலும் திமுக கூட்டணியில் விசிக இருக்கும் என்ற கருத்தால் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள்” என்று பேசியுள்ளார்.