வக்பு உமீத் இணையதளம் சட்ட விரோத நடவடிக்கை மட்டுமல்ல, உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதும் ஆகும் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வக்பு சட்டத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் வக்பு உமீத் என்ற இணையதளத்தை தொடங்கி அதில் வக்பு சொத்துக்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளது. இது சட்டவிரோத நடவடிக்கை மட்டும் அல்ல. உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதும் ஆகும்” என்று கூறியுள்ளார்.
