தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தனித்துவமான பண்பை கொண்டவர். சினிமாவில் நடிப்பதோடு தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடியவர் தான் அஜித். கடந்த சில வருடங்களாகவே எந்த வித டிவி சேனல்களிலும் அல்லது தனிப்பட்ட முறையிலும் youtube சேனல்களுக்கு கூட இவர் பேட்டியளிப்பதை தவிர்த்து வருகின்றார். அதனைப் போலவே பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட அஜித் பங்கேற்பது கிடையாது. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டக் கூடியவர்.

கார் பந்தயங்கள் மூலம் அவரது கனவை நிறைவேற்றும் வேளையில் முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கின்றார். அதில் தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறார். ந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தயப் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தி இருந்தது. தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற பன்னிரண்டாவது மிச்செலின் முகேல்லோ கால்பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்ற ரேசிங் அணி மூன்றாம் இடம் பிடித்தது.
#AjithKumar asked the fans: Do you want to sit in the car? #AjithKumarRacing pic.twitter.com/LEwTbGhh42
— Mᴀᴀʟɪᴋ Bʜᴀɪ (@Maalik_Bhai) June 26, 2025
பெல்ஜியம் ஸ்பா பிரான்கோர்சாம்ஸ் பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. தற்போது அடுத்த கார் ரேஸில் பங்கேற்பதற்காக அஜித் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். 54 வயதிலும் சளைக்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் அஜித் தற்போது ஜிடி4 ஐரோப்பிய கார் பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகின்றார். இந்நிலையில் அவருடைய ரசிகை ஒருவர் ரேஸ் காரில் உட்காரலாமா? என்று ஆசையோடு கேட்கிறார். அஜித் உடனே அவரை உட்காருங்கள் என்று சொல்லி உட்கார வைக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
