40 வயதான ரொனால்டோ, மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேறிய பிறகு 2022 ஆம் ஆண்டு கிளப்பில் சேர்ந்தார். அல் நாசருடனான அவரது ஆரம்ப ஒப்பந்தத்தின் மூலம் ரொனால்டோவுக்கு ஆண்டுக்கு 200 மில்லியன் சம்பளம் கிடைத்தது. அந்த ஒப்பந்தம் ஜூன் மாதம் காலாவதியாக இருந்தது, மேலும் ரொனால்டோ கிளப்பை விட்டு வெளியேறலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தான் அல் நாசர் கால்பந்து கிளப்பிற்கு விளையாட மேலும் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ரொனால்டோ.
இதற்காக அவர் மொத்த ஊதியமாக ரூ.4923 கோடி பெறுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலமாக அடுத்த வருடம் FIFA கால்பந்து உலக கோப்பையிலும் ரெனால்டோ பங்கேற்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
