ஆட்டம் ஆரம்பம்..! தவெகவின் செயற்குழு கூட்டம்: தேதி குறிச்சாச்சு… வெளியானது முக்கிய அறிக்கை..!!

By Soundarya on ஆனி 27, 2025

Spread the love

நடிகர் விஜய் கடந்த 2024 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.  இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலை மொத்த நாடும் உற்று நோக்கி காத்திருக்கிறது. திமுக, அதிமுக என்ற இரண்டு மாபெரும் கட்சிகள் இருந்த நிலையில் இந்த முறை தமிழ் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜயின் கட்சியும் களமிறங்கி இருக்கிறது. இதன்படி 2026 ஆம் வருடம் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் சந்திப்பதற்கு தமிழக வெற்றி கழகம் கட்சி வியூகம் அமைத்து வருகிறது.

   

கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் விஜய். இந்நிலையில் விஜய் தலைமையில் ஜூலை நான்காம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. கட்சிப் பணிகள், விஜயின் மக்கள் சந்திப்புகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.