தமிழகத்தில் நிச்சயம் NDA ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். நாளிதழுக்கு பேட்டியளித்த அமித்ஷா, லோக்சபா தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் . எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் பரப்புரை மூலம் ஓட்டுகளை திரட்டினால், நிச்சயம் NDA ஆட்சி அமையும் . 2026 இல் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகிக்கும். அதிமுகவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அமித்ஷா தேர்தலுக்கு போதுமான கால அவகாசம் இருப்பதால் சில காலத்தில் தெளிவாகிவிடும்” என்று கூறியுள்ளார்.
