‘திருமலை’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரின் மனைவி தானாம்… வெளியான ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்..

By Begam on பங்குனி 8, 2024

Spread the love

தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.  தற்பொழுது அவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்” என்று பெயரிடப்பட்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பல முன்னணி பிரபலங்களும் நடித்து வருகின்றனர். விரைவில் இந்த திரைப்பட பணிகள் முடிய உள்ளது.

   

இதைத்தொடர்ந்து ‘தளபதி 69’ எனும் ஒரே படத்தில் நடித்து முடித்து விட்டு, சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். ஒருபுறம் இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும், இனிமேல் தளபதியை திரையில் பார்க்க மாட்டோமே என கவலைப்படவும் செய்கின்றனர்.  எனவே இத்திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில்  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

   

 

இந்த நிலையில், விஜய் நடிப்பில் வெளியான திருமலை படம் குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.  நடிகர் விஜய் இயக்குனர் ரமணா இயக்கத்தில் நடித்து 2013ல் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் திருமலை. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ஜோதிகா, ரகுவரன், கௌசல்யா, கருணாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  நடிகர் விஜய் நடித்த ஆக்ஷன் மாஸ் திரைப்படங்களின் வரிசையில் கண்டிப்பாக திருமலை டாப் 5வில் இடம்பெறும். அந்த அளவிற்கு விஜய்யின் மார்க்கெட்டை வலுவாக்கிய திரைப்படங்களில் திருமலையும் ஒன்றாகும்.

திருமலை படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். ஆனால் நடிகர் விஜய்க்கு முதன் முதலில் ஜோடியாக நடித்த நடிகை யார் தெரியுமா..? அவர் வேறுயாருமில்லை.

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர் தான்.  நம்ரதாவின் நடிப்பில் திருப்தியடையாத இயக்குனர் நம்ரதாவுக்கு பதிலாக ஜோதிகாவை நடிக்க வைத்தாராம். இந்நிலையில் நடிகை நம்ரதா நடிகர் விஜயுடன் நடித்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

#image_title