திருமணத்துக்கு  ரெடியான ‘திருமகள்’ சீரியல் ஹீரோ… மணப்பெண் இவுங்க தானா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு…

By Begam

Published on:

சினிமாத்துறையை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் தங்களுக்குள் காதலித்து திருமணம் செய்து கொள்வது வழக்கமாகி விட்டது. அதுவும் சின்னத்திரையில் தற்பொழுது சர்வசாதாரணமாகி விட்டது. ராஜா ராணி சீரியல் ஆலியா மானசா , சஞ்சீவ் இவர்களை போல இன்னும் எண்ணற்ற ஜோடிகளை கூறலாம்.

   

இவர்களின் வரிசையில் தற்பொழுது ஒரு புது ஜோடி இணைத்துள்ளது. அவர்கள் யார் தெரியுமா..? வேறு யாருமில்லை. ‘திருமகள்’ சீரியலில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் சுரேஷ் சுரேந்தர் அதே சீரியலில்  நடித்து வந்த நடிகை நிவேதிதாவை திருமணம் செய்ய இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஓவியா’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சுரேந்தர்.  இதைத்தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் ராஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்பொழுது  இவர் ‘மலர்’ சீரியலில் அர்ஜுனாக நடித்து வருகிறார்.

surendhar4

இந்நிலையில் சுரேந்தர் ‘திருமகள்’ சீரியலில் தன்னுடன் நடித்த நடிகை நிவேதிதாவை திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறார். நீண்ட நாட்களாக இருவரும் பழகி வந்த நிலையில், தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.  நடிகை நிவேதிதா கல்யாணப்பரிசு,  திருமகள்,  சுந்தரி ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். தற்பொழுது  இத்தகவலை அறிந்த ரசிகர்களும், பிரபலங்களும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி  வருகின்றனர்.