விவாகரத்தான சீரியல் நடிகையிடம் காதல் வயப்பட்ட ‘திருமகள்’ சீரியல் ஹீரோ… வைரலாகும் ரொமான்டிக் புகைப்படங்கள்…

By Begam on பிப்ரவரி 8, 2024

Spread the love

சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நிவேதிதா. இவர் கல்யாணப்பரிசு,  திருமகள்,  சுந்தரி போன்ற பல  சீரியல்களில் நடித்துள்ளார். ஆனால் இவருக்கு திருமகள் தொடர் ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

   

  நடிகை நிவேதிதா சீரியல் நடிகர் SS ஆர்யன் எனபவரை 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். ஆனால்  அவர்கள் தற்பொழுது பிரிந்துவிட்டனர்.

   

 

இந்நிலையில் தற்போது திருமகள் சீரியலில் நிவேதிதா உடன் நடிக்கும் சுரேந்தர் என்பவர் உடன் காதலில் விழுந்திருக்கிறார். அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை  வெளியிட்டு சமீபத்தில் நிவேதிதா காதலை அறிவித்து இருந்தார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஓவியா’ என்கிற சீரியலின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் சுரேந்தர்.

இதைத்தொடர்ந்து அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமகள்’ சீரியலில் ராஜா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்பொழுது  இவர் ‘மலர்’ சீரியலில் அர்ஜுனாக நடித்து வருகிறார்.  நீண்ட நாட்களாக இருவரும் பழகி வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கிடையே காதல் மலர்ந்துள்ளது.

விரைவில் திருமண உறவில் இணைய உள்ள இந்த ஜோடி தங்களின் காதலை, ரொமான்டிக் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளனர். தற்பொழுது  இத்தகவலை அறிந்த ரசிகர்களும், பிரபலங்களும் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி  வருகின்றனர்.