இயக்குனர் மீது இருந்த வன்மம்.. காலில் விழுந்து கெஞ்சியும் இசையமைக்க மறுத்த இளையராஜா.. மனம் திறந்த பார்த்திபன்..

By Archana

Published on:

தமிழ் சினிமாவில் ஒப்பற்ற ஒரு கலைஞர் என்றால் அது பார்த்திபன் எனக் கூறலாம். அவரது எழுத்துக்கள் மட்டுமில்லை, அவரது படங்களை புரிந்து கொள்ளவும் நாம் சற்று வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு படத்திற்கு ஒவ்வொரு வித்தியாசத்தையும், ஒவ்வொரு புது புது யுக்தியையும் புகுத்துபவர். நடிகர், இயக்குநர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் பார்த்திபன். 1989-ம் ஆண்டு பார்த்திபன் சீதா, மனோரமா, நாசர் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் புதியபாதை. இப்படத்தில் நடித்தது மட்டுமின்றி இப்படத்தை இயக்கவும் செய்திருந்தார் பார்த்திபன்.

   

சில சமயங்களில் அவரது படங்களுக்கு ஓவராக இருக்கிறதே என பல நெகட்டிவ் கமெண்ட்கள் கொடுப்பவர்களும் உண்டு. அப்படியிருக்க, அனைத்து தரப்பினர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட படம் புதியபாதை. பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்து பிறகு ஹீரோவாகி வெற்றியடைந்தவர் பாக்யராஜ். அவரையே பின் தொடர்ந்தார் பார்த்திபன். பாக்யராஜிடம் உதவியாளராக இருந்தவர், பின்னாளில் அவரது நன்மதிப்புடன், அவரது ப்ரொடக்‌ஷனில், ஒரு படத்தை இயக்க தயாரானார் பார்த்திபன். படபூஜை எல்லாம் தடபுடலாக நடந்த நிலையில், புது இயக்குநர் தானே என்ற அலட்சியத்தை பாக்யராஜை சுற்றியிருந்தவர்கள் காட்ட, ஒரு கடிதம் எழுதிவிட்டு படத்தை விட்டு வெளியேறினார் பார்த்திபன்.

பிறகு மீண்டும் அவரை உதவியாளராக சேர்த்துக் கொண்டார் பாக்யராஜ். பின்பு அவரிடம் வேலைகளை கற்றுக் கொண்டு புதியபாதை படத்தை இயக்க தயாராகினார். கேள்விக்குறி என்ர தலைப்புடன் தொடங்கப்பட்ட இந்தப் படப்பிடிப்பு சில பல காரணங்களால் மூன்றே நாட்களில் நின்ற் போனது. பிறகு தயாரிப்பாளராக சுந்தரம் சேர, பார்த்திபன் நடிப்பிலேயே புதியபாதை என்ற தலைப்பில் படம் உருவாகி வெளியானது. பட்டிதொட்டியெங்கும் வெற்றியை பெற்றது இந்தப் படம். தமிழ் சினிமாவில் புதிய பாதையையும் உருவாக்கியது. இப்படத்தை இயக்குவதற்கு முன்பு, ஒரு படத்தை இயக்க முற்பட்டப்போது, அப்படத்திற்கு பாக்யராஜே இசையமைப்பதாக கூறினாராம்.

ஆனால் பார்த்திபனுக்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என ஆசையாம். குரு கேட்டுக் கொண்டதன் பேரில், அவரால் பேச்சை மறுக்க முடியவில்லையாம். ஆனால் புதிய பாதை படத்திற்காக இளையராஜவையே அனுகியுள்ளார் பார்த்திபன். ஆனால் அவரோ உங்களுக்கு எல்லாம் இசையமைக்கவே மாட்டேன் வெளியே போங்கள் எனக் கூறிவிட்டாராம் இளையராஜா. இதற்கு முந்தைய படத்தில் கூட இளையராஜாவிடம் இசை கேட்டதற்கு, பாக்யராஜை வைத்தே எடுத்துக் கொள் என கூறினாராம். இதற்கு மறுப்பு தெரிவித்து பார்த்திபன் காலில் விழுந்து கெஞ்சியும் கூட மறுப்பு தெரிவித்து விட்டாராம் இளையராஜா. பின்னாளில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் பிறகு, உடன் இருந்த சௌந்தர் என்பவர் இளையராஜாவிடம் சென்று புதிய பாதை படத்தை பற்றி ஆஹா ஓஹோ எனக் கூற, மீண்டும் பார்த்திபனை அழைத்து, நீங்கள் இல்லாவிடில் படம் பண்ண மாட்டேன் எனக் கூறினாயே? இப்பொழுது எப்படி பண்ணினாய் எனக் கேட்டுள்ளார். நான் இல்லை என்றாலும் நீ படம் பண்ணுவாய் என்பதற்காகவே முன்பு மறுத்ததாகவும், அதன் பிறகு பார்த்திபன் நடிப்பில் உருவான பொண்டாட்டி தேவை படத்தில் இளையராஜா இசையமைத்ததாகவும் பகிர்ந்துள்ளார் பார்த்திபன்.

author avatar
Archana