“தேமுதிகவை திடீரென தூக்கி வந்தது ஏன்?”…. திமுக கூட்டணியின் பகிரங்க இரகசியத்தை உடைத்த திருமா….!

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் வெளியேறியதற்கு திமுகவின் அணுகுமுறையே முதன்மையான காரணம் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், கூட்டணியை உடைக்காமல் காப்பாற்ற தாம் தொடர்ச்சியாக முயற்சித்ததாகவும், ஆனால் திமுக நிர்வாகத்தால் அதைச் செய்ய முடியாமல் போகிவிட்டது என்றும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் போன்ற தோழமை கட்சிகளுடன் திமுக நல்லுறவைப் பேணியிருந்தால் அவர்கள் கூட்டணியை விட்டு விலகியிருக்க மாட்டார்கள் என்றும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு விருப்பமில்லாத சூழலிலும் திடீரென தேமுதிகவை உள்ளே கொண்டு வந்தது யாருக்கும் மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்றும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன், தவெக உடனான கூட்டணி முடிவுக்கு விசிகவின் வன்னி அரசே முக்கியக் காரணம் என்பதைத் தெளிவுபடுத்தினார். இடைத்தேர்தலில் நிற்காமல், அமைச்சர் பதவிகளை நிராகரித்து வந்த நிலையில், எளிய குடும்பத்தைச் சேர்ந்த வன்னி அரசு போன்ற 30 ஆண்டு கால விசுவாசிகளுக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும்போது அதைத் தட்டிப் பறிப்பது சரியாக இருக்காது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார். திமுக உடனான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கும், தோழமை கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறியதற்கும் திமுகவின் செயல்பாடுகளே பொறுப்பேற்க வேண்டும் என்றும், இதில் திராவிட இயக்கங்கள் தம்மை விமர்சிப்பது நியாயமற்றது என்றும் அவர் காரசாரமாகத் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

ஐயோ பாவம்… காதல் ஜோடிக்கு உதவியதற்காகக் காவு வாங்கிய பகை… விநாயகர் மண்டபத்தில் வாலிபர் படுகொலை… ஹைதராபாத்தில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

ஹைதராபாத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஜோடிக்கு உதவியதற்காக, கார்த்திக் என்ற வாலிபர் விநாயகர் மண்டபத்தில் வைத்து ரவுடிகளால் கொடூரமாகக்…

7 minutes ago

“எளிமையின் உச்சம்…” அபுதாபி இளவரசர் ஷேக் காலித்தின் செயலால் இணையத்தில் குவியும் பாராட்டுகள்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்…!!

புதுடெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் கலந்துகொண்ட அபுதாபி இளவரசர் ஷேக் காலித்…

9 minutes ago

வேற யாரையும் என்னால… நினைச்சுக்கூட பார்க்க முடியாது… குடும்பத்தை எதிர்த்து காளுவை… கரம்பிடித்த பணக்கார பெண்… வைரலாகும் காதல் சம்பவம்…!

குடும்பத்தினரின் கனவெல்லாம் இளைய மகன் பெரிய வியாபாரியாக வர வேண்டும் என்பதுதான். ஆனால், காளுவோ தன் விருப்பப்படியே ஒரு கன்னிகை…

18 minutes ago

Breaking: பட்டப்பகலில் பயங்கரம்… டாஸ்மாக்கில் இளைஞர் கழுத்தறுத்து கொடூரக் கொலை…!!

தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கொடூரக் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக்…

24 minutes ago

அய்யய்யோ… சாலையில் தனியாக நின்ற 12 வயது சிறுமி… காரை நிறுத்தி விசாரித்த நபருக்குக் காத்திருந்த அதிர்ச்சி… நடந்தது என்ன?… இணையத்தில் வைரல்…!

அவர் தனது ஸ்கூட்டர் வழியில் பழுதாகிவிட்டதால், அதைச் சரிசெய்வதற்காக அருகிலுள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு நடந்து செல்ல நேர்ந்ததாகக் கூறினார்.…

40 minutes ago

“என் மகனின் சாவுக்கு நீதான் காரணம்…” மருமகளை கோடாரியால் வெட்டி கொன்ற மாமனார்… தாயை இழந்து பரிதவிக்கும் 2 பிள்ளைகள்…. பகீர் சம்பவம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் யசோதரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி ரவிசங்கர் பாலி (42). இவரது கணவர் கடந்த மூன்று…

44 minutes ago