திமிரு பட நடிகையா இது..? ஆள் அப்படியே மாறிட்டாங்களே.. லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து அசந்த ரசிகர்கள்..!!

By Priya Ram

Updated on:

நடிகை ஸ்ரேயா ரெட்டி தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளனியாக திரை வாழ்க்கை ஆரம்பித்தார்.

   

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான சாமுராய் படத்தில் நடித்தார். அதன் பிறகு ஸ்ரேயா ரெட்டிக்கு புகழை தேடித்தந்தது திமிரு படத்தில் இடம்பெற்ற ஈஸ்வரி கதாபாத்திரமே. அந்த கதாபாத்திரம் மூலம் ஸ்ரேயா மக்கள் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார்.

அதன் பிறகு வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம் உள்ளிட்ட படங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். வில்லி கேரக்டரில் சிறப்பாக நடித்து திரையுலகில் ஸ்ரேயா ரெட்டி தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சரியா ரெட்டி கருப்பு நிற உடை அணிந்து கிளாமராக போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் ஈஸ்வரி கதாபாத்திரத்தில் தாவணி உடுத்தி நடித்த ஸ்ரேயா ரெட்டியா இப்போது கிளாமராக போட்டோஸ் வெளியிட்டுள்ளார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

zs
author avatar
Priya Ram