பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த் பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர். தற்போது கேரளாவில் கோட் படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்காக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த விஜயை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். உடனே விஜய் தன்னை சுற்றி இருந்த கேரளா ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி அசத்தினார். இதே போல ஒரு குட்டி குழந்தை விஜய்க்கு முத்தம் கொடுத்தது, விஜய் மாற்றுத்திறனாளி ரசிகரை சந்தித்தது போன்ற வீடியோக்கள் வைரலானது.
இந்த நிலையில் இன்று மாலை ஷூட்டிங் முடிந்து தமிழ்நாட்டிற்கு புறப்பட்ட விஜய் கேரளா ரசிகர்களை சந்தித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது, கேரளா ரசிகர்களின் அன்பிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மற்றும் கேரளா ரசிகர்கள் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நான் உங்களது விஜய் தான்.
உங்களது தளபதி தான். சினிமா காரரில் என்னை ஒரு நடிகனாக மட்டும் பார்க்காமல் உங்கள் வீட்டுப் பிள்ளையாக பார்ப்பது என்னை ஆச்சரியப்படுத்தியது. தொடர்ந்து உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். அவர் பேசும் போது ஏராளமான ரசிகர்கள் தளபதி தளபதி என சத்தம் போட்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Indha Jenmam matum ila , Inum ethana Jenmam eduthalum ” NAAN UNGA VIJAY DHAN ” ????????????#VijayEuphoriaInKerala #TheGreatestOfAllTime pic.twitter.com/lV3uAUpBdE
— Arun Vijay (@AVinthehousee) March 22, 2024