முசாபர்பூர் – ஹடாப்சர் எக்ஸ்பிரஸ் தொடருந்தில் அனைத்துக் கழிவறைகளிலும் தண்ணீர் ஓடுவதாகவும், குழாய்கள் மாயமாகியிருப்பதாகவும் ரயில்வே ஊழியர்களுக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாகச் செயற்பட்ட ஊழியர்கள், தொடருந்தின் நீர் விநியோகத்தை உடனடியாகத் துண்டித்து, பயணிகளிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடந்துகொண்ட ஒரு நபரை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். அவரிடம் இருந்த பையைச் சோதித்தபோது, அதற்குள் மற்றொரு பிளாஸ்டிக் பை இருந்தது; அதில் ஒன்றிரண்டு அல்ல, மாறாக முழுத் தொடருந்து கழிவறைக்குமான குழாய்களின் தொகுப்பே சிக்கியது.
கையும் களவுமாகப் சிக்கியதும் அந்த நபர் செய்வதறியாது திகைத்தார். பயத்தில் கை கால்கள் நடுங்க, அனைவரின் முன்னேயும் மண்டியிட்டுத் தன் தவறுக்கு மன்னிப்புக் கோரி கதறி அழுதார்.
