மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞரான குணால் சந்த்குடே, காவ்தியா மலையில் இருந்து தவறி விழுந்து தனது பெற்றோருடன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டும் இதே மலையின் உச்சிக்குச் சென்று குணால் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு விரைந்த காவலர்கள் சுரேஷ் பிசே மற்றும் ஜெயேஷ் சலுங்கே ஆகியோர், குணாலை மிகுந்த பொறுமையுடன் பேசி அவரது தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டுள்ளனர்.
“அந்த இரண்டு காவலர்களும் அவனைச் சமாதானப்படுத்தி, அவனது குடும்பத்தினரிடம் பத்திரமாக சேர்த்தனர்” என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த முறை குடும்பப் பிரச்சினை மற்றும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக அதே இடத்தில் நடந்த எதிர்பாராத விபத்தில் குணாலும் அவரது பெற்றோரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
