‘எனக்கும் அட்ஜஸ்மண்ட் தொல்லை இருந்துச்சி’.. ஜெயம்ரவி பட நடிகை பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..

By Begam on நவம்பர் 28, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களின் ஒருவர் தான் நடிகை விசித்ரா. இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென மீண்டும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே எழுந்துள்ளது என்று கூறலாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட பூகம்பம் டாஸ்கில் தான் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமான சம்பவங்களை விசித்ரா பகிர்ந்து கொண்டார்.

   

அதாவது அவர் சொன்ன அந்த பாலியல் வன்கொடுமை கேரளாவில், மலம்புழாவில் நடந்த அந்த ஷூட்டிங்கில், நைட் என்னோட ரூமுக்கு வந்துடு என, விசித்ரராவுக்கு அதிரடி கட்டளையிட்டவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தான் என்றும், விசித்ராவை கன்னத்தில் அறைந்தவர் ஸ்டண்ட் மாஸ்டர் ஏ விஜய் என்றும், 2001ல் நடந்த அந்த சம்பவம், பலேவடிவி என்ற தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில்தான் நடந்தது என்றும் முடிவாக சொல்லப்படுகிறது.

   

 

இதற்கிடையே ஓட்டலில் நடந்த சம்பவம் குறித்து, அன்று அந்த ஓட்டலில் ஜெனரல் மேனேஜராக இருந்த, அதன்பிறகு விசித்ராவின் கணவராக மாறிய சாஜியும் கூறியிருந்தார். அவர் ‘ விசித்ரா சொன்ன அத்தனையும் உண்மை. இப்போதும் அந்த பிரபல நடிகர் குறித்து வெளியே பகிரங்கமாக சொன்னால் எனக்கும், என் மனைவிக்கும், என் குடும்பத்துக்கும் பாதுகாப்பில்லை என்பதால் சொல்லாமல் இருப்பதே எங்களுக்கு நல்லது’ என்று சொல்லியிருந்தார்.

தற்பொழுது விசித்ராவை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து மௌனம் கலைந்து வருகின்றனர். தற்பொழுது காதல் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்த நடிகை சரண்யா தனக்கு படப்பிடிப்பில் நடந்த பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது, ‘ விசித்ரா சொன்னது போல திரைத்துறையில் நிறைய நடந்து வருகிறது. நிறைய நடிகைகள் கஷ்டத்தினை அனுபவிக்கின்றனர்.

எனக்கும் கூட நிறைய மோசமான அனுபவங்கள் நடந்து இருக்கிறது. நாம் பெரிய நடிகையாக இருக்கும் போது எது சொன்னாலும் நடக்கும். சின்ன நடிகையாக இருக்கும் போது நாம் எவ்வளவு பிரச்னையை சந்தித்தாலும் அதை வெளியில் சொன்னால் பெரிதாக எடுப்படாது. மீடியாவை தெரிந்து தானே உள்ளே வந்தீங்க. இப்படிதானே இருக்கும் என இளக்காரமாக பேசுவார்கள். சினிமாத்துறையில் மட்டுமல்ல எல்லா துறையிலும் இதே மாதிரி பிரச்னை இருக்கத்தான் செய்கிறது.’ என்று கூறியுள்ளார்.