“கலியுகக் கொடுமை…” ஏழுமலையான் கிட்டயே கை வரிசையா?… மலைப்பாதையில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி… என்னது சாமிய காணம?… கொதித்தெழுந்த பக்தர்கள்… சல்லடை போட்டுத் தேடும் போலீசார்…!

By Visaka on ஆடி 22, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடைபயணமாகவும் வாகனங்கள் மூலமாகவும் சென்று வழிபடுவது வழக்கம். அவ்வாறு அலிபிரி முதல் மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்கள், வழியில் உள்ள பல்வேறு சிறு தெய்வச் சிலைகளையும் வணங்கிச் செல்வது மரபு. இந்நிலையில், முதல் மலைப்பாதையின் 7-வது மைல் அருகே அமைக்கப்பட்டிருந்த சிறிய அனுமன் கற்சிலை நேற்று நள்ளிரவில் மர்ம நபர் ஒருவரால் திருடப்பட்டுள்ளது. சாமி கும்பிடுவது போல வந்த அலி நபர், திடீரென அனுமன் சிலையைத் தூக்கிக்கொண்டு தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காலையில் சிலை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உடனடியாகத் திருப்பதி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவில் நபர் ஒருவர் அனுமன் சிலையைச் சாமர்த்தியமாகத் திருடிச் செல்லும் திடுக்கிடும் காட்சிகள் பதிவாகியுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதன் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரைப் பிடிக்கப் போலீசார் தீவிர வலைவீச்சு நடத்தி வருகின்றனர். ஆன்மீகப் புகழ்பெற்ற திருப்பதி மலையிலேயே சிலை திருடப்பட்ட இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.