பெற்றோர் சொன்ன அந்த ஒரு வார்த்தை…! ரூமுக்கு வந்த தோழிகள்….! மருத்துவ மாணவியை அந்த கோலத்தில் கண்டு… மனதை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி….!!

By Devi Ramu on ஆடி 22, 2026

Spread the love

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரியாஸ்ராய் என்ற 24 வயது மாணவி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரிக்குச் செல்லாமல் தங்கியிருந்த அறையிலேயே மின்விசிறியில் தூக்கிட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டார். கல்லூரி முடிந்த பிறகு திரும்பிய தோழிகள் கதவு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்து காயார் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கதவை உடைத்துச் சென்று உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த மாணவி இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையில், சொந்த ஊருக்கு வர விருப்பம் தெரிவித்துப் பெற்றோரிடம் பேசியுள்ளார். ஆனால், பெற்றோர் அவரை ஊருக்கு வர வேண்டாம் எனக்கூறி படிப்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலே தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.