தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தனது கூட்டணியை பலமாக வைத்திருக்கும் திமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அதே சமயம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை ஆட்சியை கைப்பற்ற பல வியூகங்களை வகுத்து வருகிறது. இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே சமயம் மாற்றுக் கட்சியினர் பலரும் முக்கிய கட்சியுடன் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமாகா உடன் காமராஜர் மக்கள் கட்சி முறைப்படி இணைந்தது. தமிழருவி மணியன் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஜி கே வாசன் முன்னிலையில் தமாகாவில் இணைந்தார். அதன் பிறகு பேசிய ஜிகே வாசன், தமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி ஒன்றாக இணைந்தது வருங்காலங்களில் அரசியல் களத்திற்கு வசந்தகாலமாக இருக்கும். இரு பெயர்களாக இருந்தாலும் இரண்டும் இரு கண்கள், இது கூட்டுக் குடும்பங்கள் இணையும் விழா என்று அவர் தெரிவித்துள்ளார்
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…