நொடிக்கு நொடி பரபரப்பு… தவெகவில் இணையும் அடுத்த அரசியல் புள்ளி… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்…!

Spread the love

அதிமுகவின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் போர் கொடி தூக்கியதால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விஜயின் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்தார். விஜயும் அவரை அரவணைத்து அவருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்.

தமிழக வெற்றி கழகம் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல பொறுப்பாளர் என இரண்டு பதவிகளை விஜய் வழங்கி கௌரவித்தார். கட்சியில் சேர்ந்தவுடன் செங்கோட்டையன் தன்னுடைய சொந்த ஊரான ஈரோட்டில் தனது செல்வாக்கை காட்ட திட்டமிட்டார். இதற்காக பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தை விஜய் தலைமையில் நடத்த முடிவு செய்தார். ஒவ்வொரு நிகழ்வையும் அவர் திட்டமிட்டு நடத்திய நிலையில் பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் நடந்தது. இதில் விஜய் பங்கேற்ற உரையாற்றினார். விஜய் பேசுகையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பணிகளையும் குறிப்பிட்டு பேசினார்.

மேலும் அவரைப் புகழ்ந்து விஜய் பொதுக்கூட்டத்தில் பேசி இருந்தார். ஈரோடு பொதுக்கூட்டத்திற்கு பிறகு தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே மாறி உள்ளது. இதனால் செங்கோட்டை யன் மற்றும் நாஞ்சில் சம்பத் போன்றவர்களுக்குப் பிறகு முன்னாள் எம்எல்ஏக்கள் பலர் தமிழக வெற்றி கழகம் கட்சியில் சேர வாய்ப்புள்ளது. அவர்கள் எந்த கட்சியில் இருந்து வர உள்ளனர், அவர்கள் யார் என்பது தற்போது வரை சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. இதனை அறிந்து கொள்ள தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். அடுத்து கொங்கு மண்டலமான சேலத்தில் பொதுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது

Nanthini

Recent Posts

“டிரம்ப் Vs ஈரான்: ‘எங்களை மிரட்ட முடியாது’ – அமெரிக்காவின் அதிரடி பதிலடியால் பதற்றம் உச்சம்… ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் காட்டும் ஆக்ரோஷம்…!

மத்திய கிழக்கில் நிலவி வந்த தற்காலிக அமைதி மீண்டும் குலைந்துள்ளதால் உலக நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. சில நாட்களுக்கு முன்புதான்…

25 seconds ago

எங்க குடும்பம் பிரிஞ்சதுக்கு காரணம் சவுமியாதான்… கூடவே இருந்து என் முதுகில் குத்திட்டாங்க… உண்மையை உடைத்த ராம்தாஸ் மகள்…!!

தமிழக அரசியலில் நீண்டகாலம் செல்வாக்கு செலுத்தி வந்த பாட்டாளி மக்கள் கட்சி, தற்போது குடும்பப் பூசலால் பிளவுபட்டுள்ள நிலையில், டாக்டர்…

2 minutes ago

“இனி எங்க கண்ட்ரோல்”… “ஈரானின் அதிரடி ‘செக்-மேட்’… இனி அனுமதியின்றி ஒரு கப்பல் கூட நுழைய முடியாது… உச்சகட்டப் பதற்றத்தில் வளைகுடா…!

வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் இன்னும் முழுமையாகக் கலைந்துவிடாத நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு…

3 minutes ago

யாரும் சொல்லாத உண்மை… தூங்கும் முன் ஒரு கிளாஸ்… காலையில் அதிசயம்… ஆளி விதை நீரை குடித்தால் உடம்பில் நடக்கும் மேஜிக் இதுதான்…!!!

ஆளி விதை நீர்: தயாரிக்கும் முறையும் ஆரோக்கியத் தொடக்கமும் ஆளி விதைகள் மட்டுமின்றி, அதன் நீரும் உடல் நலத்திற்கு ஒரு…

4 minutes ago

1979-ல இருந்து ஆரம்பிக்கலாமா.? உங்க ரகசியத்தை வெளியே சொன்னால் வெளியில முகம் காட்ட முடியாது… எடப்பாடியை கிழித்தெடுத்த செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு…

7 minutes ago

அவிநாசியில் திடீரென காரை நிறுத்திய ஸ்டாலின்… சாலையில் இறங்கி செய்த ‘அந்த’ காரியம்… எல்.முருகன் தொகுதியிலேயே செக் வைத்த திமுக…!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்றத் தொகுதியில், திமுகவின் இளம் வேட்பாளர் டாக்டர் கோகிலாமணியை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட திடீர்…

7 minutes ago