Categories: சினிமா

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போவது இவங்க தானா…. இணையத்தில் கசிந்த முடிவுகள் இதோ…

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுபவர்களை பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கிய நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை கடக்க உள்ளது. இதில் 20 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்ட நிலையில் 21 வது போட்டியாளராக வைல்ட் கார்டு என்ட்ரி  மூலம் மைனா நந்தினி கலந்து கொண்டார்.

போட்டியாளர்கள் அனைவரும் எந்த அளவிற்கு ஒற்றுமையாக இருக்கின்றார்களோ அந்த அளவிற்கு நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை, பாசம் ,காதல் என உணர்ச்சிகளும் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்த நாளிலிருந்து மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்போட்டியில் யார் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும் 100 நாட்கள் உள்ளே இருந்து வெற்றியாளராக வருவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜி பி முத்து தற்பொழுது வீட்டை விட்டு வெளியேறுகிறார் என்று வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பாகி வருவது நாம் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் யாரெல்லாம் வெளியேற இருக்கிறார்கள் என்பதை பற்றிய தகவலை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அதன்படி தற்பொழுது 4 போட்டியாளர்கள் குறைவான வாக்குகளுடன் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஷெரினா, ஷிவின், மகேஷ்வரி மற்றும் சாந்தி இவர்கள் நால்வரும் குறைந்த வாக்குகளுடன் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள். ஏற்கனவே மகேஸ்வரி அனைவர் விஷயத்திலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கிறார் என்றும், பிக் பாஸ் வீட்டின் அடுத்த வனிதா என்றும் கூறப்பட்டார்.

இவரை பிக் பாஸ் வீட்டை விட்டு முதலில் வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது சாந்தி குறைந்த வாக்குகளுடன் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்களால் கூறப்படுகிறது. ஆனால் இதைப் பற்றிய தெளிவான விவரம் நமக்கு தெரியவில்லை.

Begam

Recent Posts

அமெரிக்கா போட்ட ஒரே ஒரு போடு… ராக்கெட் வேகத்தில் எகிறிய ‘தங்கம்’… இனி சாமான்யர்கள் வாங்கவே முடியாதா…!

அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…

4 minutes ago

ஐரோப்பாவை நடுங்க வைக்கும் ‘ஒமேகா பிளாக்’… இந்திய பருவமழையை காலி செய்யப் போகிறதா… அதிர்ச்சித் தகவல்…!

தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…

28 minutes ago

இவன் மனிதனே இல்லை…! இரண்டு லாரிகளுக்கு நடுவே புகுந்த ‘மரண ஓவர்டேக்’… சோசியல் மீடியாவை உலுக்கும் ஷாக்கிங் வீடியோ…!!

சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…

32 minutes ago

முடியலடா சாமி..! கொளுத்தும் வெயிலுக்குப் பயந்து… கடையிலேயே பாயை விரித்த மக்கள்… பிரம்மாண்ட பர்னிச்சர் கடையை ஆக்கிரமித்த பொதுமக்கள்… நெட்டிசன்கள் வியப்பு..!!

ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…

35 minutes ago

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் போராட்டத்தால் அரசுக்கு வந்த உச்சக்கட்ட நெருக்கடி… மாணவர்களுக்காக உயிரை பணயம் வைக்கும் சோனம் வாங்சுக்… தீவிரமடையும் உண்ணாவிரதம்…!

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி…

41 minutes ago