அதிமுக-விற்கு அடுத்த இடி…”சேலை தர்றாங்க… பொம்பளைங்க பாவாடை கேட்குறாங்க…”… வாயைக் கொடுத்து வம்பில் சிக்கிய மாஜி அமைச்சர்…!

Spread the love

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுவெளியில் பெண்களின் ஆடைகள் குறித்து ஆபாசமாகப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டத்தில் பேசிய அவர், “ஏற்கனவே என்னென்னமோ கொடுத்துருக்கிறாங்க… ஹாட்பாக்ஸ் எல்லாம் நூறு ரூபாய்க்கு கிடைக்குது, அதைப்போய் கொடுக்கிறாங்க. சேலையும் கொடுத்துருக்காங்க… எப்படிரா பாவாடை இல்லாமல் கட்டுறது என பொம்பளைங்க எல்லாம் கேட்கிறாங்க” என்று இரட்டை அர்த்தம் தொனிக்கும் வகையில் பேசியுள்ளார். நகைச்சுவை என்ற பெயரில் ஒரு மூத்த அரசியல்வாதி இவ்வாறு தரம் தாழ்ந்து பேசியது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் சீனிவாசனின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அரசியல் மேடைகளில் மக்கள் நலன் குறித்துப் பேசாமல், பெண்களின் அந்தரங்க ஆடைகளை முன்னிறுத்தி ஆபாசமாக விமர்சிப்பது ஒரு முன்னாள் அமைச்சருக்கு அழகல்ல என்று பலரும் சாடி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக தரப்பில் மதுரை உள்ளிட்ட இடங்களில் செல்லூர் ராஜூ போன்றோர் ஹாட்பாக்ஸ் வழங்கி வரும் நிலையில், அதை கிண்டல் செய்வதாக நினைத்து சொந்தக் கட்சியினரையே சீனிவாசன் விமர்சித்தது கட்சி வட்டாரத்திலும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

சமீபத்தில் நடிகை நயன்தாரா குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி ஓய்வதற்குள், தற்போது திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சு அதிமுகவிற்கு மேலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி கட்சிகள் தயாராகி வரும் சூழலில், பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் இது போன்ற நாகரிகமற்ற பேச்சுகளைத் தவிர்த்து, கண்ணியமான அரசியல் கலாச்சாரத்தைக் கடைபிடிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

8 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

8 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

8 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

8 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

8 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

8 மணத்தியாலங்கள் ago