ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும், ஒரு தனித்துவம் உண்டு. அது அவர்கள் காதல் உறவிலும் வெளிப்படும். சிலர் காதலில் எப்போதும் அதிகாரம் தங்கள் கையில் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள், சிலர் தங்கள் காதலுக்காக அனைத்தையும் விட்டுக் கொடுப்பார்கள், சிலர் தங்கள் துணைக்காக எதையும் செய்து முடிப்பார்கள். வாழ்க்கை எந்தெந்த ராசியில் இருப்பவர்கள், எப்படிப்பட்டவர்கள் என்பதை காண்போம்.
மேஷம்
- மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஆர்வம், லட்சியம், தைரியத்தோடு தொடர்புடையவர்கள்.
- அவர்களது ஆக்ரோஷமான கோபத்திற்கு பின்னால், ஒரு அன்பான இதயம் உள்ளது.
- தங்கள் துணையின் மகிழ்ச்சிக்காக, எதையும் தியாகம் செய்ய உள்ளனர்.
- அவர்களின் துணிச்சலான இயல்பு, சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள வைக்கிறது.
கடகம்
- சந்திரனால் ஆளப்படும் கடக ராசிக்காரர்கள் தீவிர உணர்வும், அக்கறையான இயல்பும் கொண்டவர்கள்.
- அவர்கள் தங்கள் துணைக்கு, ஆதரவையும், பாதுகாப்பையும் அளிக்க அதிக முயற்சி எடுப்பார்கள்.
- கடக ராசிக்காரர்களின் தியாக இயல்பால், தங்கள் துணையின் தேவைகளை அறிந்து, அதை தங்கள் தேவையாக நினைத்து செயல்படுவார்கள்.
- தங்கள் அன்புக்குரியவருக்கு பாதுகாப்பான அன்பான சூழலை அமைக்க முடிந்தவரை அனைத்தையும் செய்வார்கள்.
துலாம்
- தங்கள் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து விஷயங்களிலும், நல்லிணக்கம், ஒற்றுமையை பராமரிக்க விரும்புவார்கள்.
- தங்களது உறவுகளில், சமரசம், தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருப்பார்கள்.
- தங்கள் துணையின் ஆசைகளுக்கும், தேவைகளுக்கும் தங்கள் விருப்பத்தை தியாகச் செய்ய தயாராக இருக்கும் துலாம் ராசிக்காரர்கள், காதலுக்காக தன்னலமின்றி விட்டுக் கொடுக்கும் திறன் கொண்டவர்கள்.
விருச்சகம்
- இவர்கள் தீவிரம் மற்றும் அதீத ஆர்வத்துடன் தொடர்புடையவர்கள்.
- தங்கள் துணியின் மீது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர்கள்.
- தங்கள் துணையை பாதுகாக்கவும், மகிழ்ச்சியாக வைத்திருக்கவும், எப்படிப்பட்ட தியாகங்களை கூட செய்ய தயாராக இருப்பார்கள்.
- தங்கள் துணையிடம், அவர்களின் விசுவாசத்திற்கும், நேர்மைக்கும் எல்லையே இல்லை.
- தங்கள் துணையை ஆதரிக்கவும், மேம்படுத்தவும், முயற்சி எடுப்பதோடு அவர்களை விட்டுக் கொடுக்கவும், தியாகம் செய்யவும் கூட, தயாராக இருப்பார்கள்.
- இவர்கள், அன்பின் ஆழத்தை புரிந்து கொண்டு, அதை பாதுகாக்க கடுமையாக முயற்சி செய்வார்கள்.
