Categories: சினிமா

சினிமால இதெல்லாம் பொய்… இந்த நிலை மாறனும்… மனம்திறந்த H வினோத்…

Spread the love

H வினோத் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் விஜய் மில்டன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் H வினோத். அவருடன் இணைந்து பச்சை குதிரை மற்றும் கோலி சோடா ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார் H வினோத்.

2014 ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் H வினோத். இந்த திரைப்படம் விமர்சகர் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. முதல் படத்தின் மூலமாகவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் H வினோத். இந்த திரைப்படம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். அப்படி ஒரு வலுவான கதைகளம் கொண்டிருந்தது சதுரங்க வேட்டை திரைப்படம்.

பிறகு 2017 ஆம் ஆண்டு கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தை இயக்கினார் H வினோத். இந்த திரைப்படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருதை வென்றார். அடுத்ததாக 2019 ஆம் ஆண்டு நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, 2022 ஆம் ஆண்டு மீண்டும் அஜித்துடன் இணைந்து வலிமை, 2023 ஆம் ஆண்டு துணிவு என தொடர்ந்து மூன்று படங்கள் அஜித்துடன் இணைந்து இயக்கியிருக்கிறார் H வினோத். குறைந்த அளவில் படங்களை எடுத்திருந்தாலும் தனித்துவமான கதை அம்சத்தை கொண்டிருந்ததால் முன்னணி இயக்குனர்களுள் ஒருவரானார் H வினோத்.

தற்போது நடிகர் விஜயின் தளபதி 69 என்ற திரைப்படத்தை H வினோத் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் ஏற்கனவே இருக்கும் விஜய் அவர்களின் படங்களை போல் இல்லாமல் ஜாலியான ஒரு படமாக இருக்கும் என்று கூறியிருந்தார் H வினோத். இந்த திரைப்படம் விஜய் அரசியலுக்கு வந்ததால் அவர் கடைசியாக நடிக்கப் போகும் திரைப்படம் என்று கூறி வருவதால் இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட H வினோத் தமிழ் சினிமாவில் நடக்கும் பொய்களைப் பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், படம் இவ்வளவு வசூலித்தது பாக்ஸ் ஆபிஸ் அப்படின்னு சொல்வது எல்லாமே பொய், அப்படி பொய் சொல்ற அளவு அந்த சூழ்நிலைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்படுகிறார்கள் என்றே தான் சொல்ல வேண்டும். இந்த நிலைமை மாறனும் ஒரு படம் பணத்திற்கான நோக்கத்திற்கு மட்டுமே எடுக்கப்படக்கூடாது. ஒரு மனிதனை மாற்றம் அடைய செய்ய வைக்கும் விதத்தில் ஒரு படம் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் H வினோத்.

admin

Recent Posts

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

7 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

46 minutes ago

இன்று நேரில் ஆஜராகாத செந்தில் பாலாஜி…. அடுத்த 24 மணி நேரத்தில் அதிரடியாக பாய்கிறதா கைது நடவடிக்கை?…. பரபரக்கும் தமிழக அரசியல்….!

தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்…

54 minutes ago