#image_title
கோபிநாத் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிறந்து வளர்ந்தவர். 1997 ஆம் ஆண்டு கோபிநாத் யுனைடெட் டெலிவிஷனில் தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க்கில் சேர்ந்து சிறிது காலம் பணிபுரிந்தார் கோபிநாத்.
பின்னர் ஜெயா டிவி, என் டி டிவி, சிஎன்பிசி, நியூஸ் 18 ஆகிய சேனல்களில் அறிக்கையிடல் பணிகளை செய்து வந்தார் கோபிநாத். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பினால் விஜய் டிவியில் சேர்ந்து மக்கள் யார் பக்கம் என்ற அரசியல் பகுப்பாய்வு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்தார் கோபிநாத்.
மக்கள் யார் பக்கம், நடந்தது என்ன, மனிதர்களும் என் தேசமும், என் மக்கள் போன்ற தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்கியுள்ளார் கோபிநாத். இது தவிர ரேடியோ சிட்டியில் ரேடியோ ஜாக்கி ஆகவும் பணிபுரிந்துள்ளார் கோபிநாத்.
இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சி ஆகும். 2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி 18 வருடங்களுக்கும் மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட எபிசோடுகளை கடந்து நடத்தி வருகிறார் கோபிநாத். மேலும் இதுவரை 12 புத்தகங்களை எழுதியுள்ளார்.
இது தவிர தெருவெல்லாம் தேவதைகள், கடவுச்சொல், நிமிர்ந்து நில் போன்ற சில திரைப்படங்களில் கெஸ்ட் கதாபாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் கோபிநாத். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோபிநாத் தனது வளர்ச்சிக்கு யார் காரணம் என்பதை பற்றி பேசி இருக்கிறார்.
கோபிநாத் கூறியது என்னவென்றால் என்னுடைய வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க காரணம் என் மனைவி தான். எல்லாரும் அவங்க மனைவியை அம்மாவா தான் பார்ப்பாங்க. ஆனா நான் என் மனைவியை அப்பாவா பாக்குறேன். எனக்கு அந்த அளவுக்கு சப்போர்ட் பண்ணி இருக்காங்க என்று உருக்கமாக பேசியிருக்கிறார் கோபிநாத்.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகளிர் விடுதி மாடியில் இருந்து குதித்து, 22 வயது இளம் ஐடி ஊழியர் தற்கொலை செய்து…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் போர்க்களம் தற்போது "கட்சி நிதி" விவகாரத்தால் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.…
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…
தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…
எம்.எஸ். தோனியின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது…
திமுக மறுசீரமைப்பு குழுவில் இளம் நிர்வாகிகளான பரந்தாமன், எழிலன் போன்றோர் நியமிக்கப்பட்டிருப்பது அக்கட்சியின் சீனியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…