Connect with us

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பக்தர்களுக்கு இத்தனை வகை சாப்பாடா….? அட… இது லிஸ்ட்லயே இல்லயே…

ASTROLOGY

முத்தமிழ் முருகன் மாநாட்டில் பக்தர்களுக்கு இத்தனை வகை சாப்பாடா….? அட… இது லிஸ்ட்லயே இல்லயே…

இந்து சமய அறநிலைத்துறை சார்பாக அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் பழனியில் நேற்று ஆகஸ்ட் 24 மற்றும் இன்று ஆகஸ்ட் 25 ஆகிய தினங்களில் வெகு விமர்சையாக நடந்து வருகிறது. நேற்று இந்த மாநாட்டை முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதனால் பழனியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

   

இந்த முத்தமிழ் முருகன் மாநாட்டின் நோக்கம் என்னவென்றால் உலக நாடுகளில் திருமுருக வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை, மலேசியா, மியான்மர், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மொரிசியஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, கனடா இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனித்துவம் பெற்ற வழிபாடாக சிறந்து விளங்குகிறது ஆதலால் உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைக்க தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை இம் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

   

இந்த மாநாட்டில் உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்துள்ளது இந்த மாநாடு. மேலும் மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள் பக்தர்கள் கண்டு களிக்கும் வகையில் முருகனின் சிறப்புகள் குறித்த கண்காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் முருக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

 

இது மட்டுமில்லாமல் 3டி திரையரங்கில் முருகப் பாடல்கள், நடன நிகழ்ச்சிகள், இசை கச்சேரிகள் நடந்து வருகின்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் பக்தர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ ஒரு லட்சத்தை தாண்டும் என்பதால் அதற்கு ஏற்றார் போல் சிறப்பாக ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஒரு லட்சம் பேருக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாத பைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பிரசாத பையில் 200 கிராம் பஞ்சாமிர்தம், அபிஷேக விபூதி, லேமினேஷன் செய்யப்பட்ட முருகன் புகைப்படம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது. அதிகமாக கூட்டம் இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் பக்தர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட உணவுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இத்தனை வகையான உணவுகளை பரிமாறுகிறார்களா என்று அதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டு உள்ளனர். அந்த உணவுகளின் பட்டியல் என்னவென்றால் லிச்சி சந்தேஷ், பனங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா, மலபார் கீ ரைஸ், வைட் குருமா, ஆனியன் ரைத்தா, சாதம், ஆந்திரா பருப்பு பொடி, நெய், சாம்பார், எண்ணெய் கத்தரிக்காய் புளிக்குழம்பு, ரசம், தயிர், கேரட் பீன்ஸ் பொரியல், உருளை கார வருவல், பிந்தி பீனட் ஃப்ரை, அப்பளம், பருப்பு, மசால் வடை, அடை பிரதமன், பாயாசம் மற்றும் மா இஞ்சி தொக்கு என இத்தனை வகைகளாக வடை பாயாசத்துடன் முருகனை காண வரும் பக்தர்களுக்கு உணவு பரிமாறப்படுகிறது.

Continue Reading
You may also like...

More in ASTROLOGY

To Top