Connect with us

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேவையில்லாமல் என்னையும் என் மனைவியையும் இழுத்து விடுறாங்க… குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த நெல்சன்…

NEWS

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேவையில்லாமல் என்னையும் என் மனைவியையும் இழுத்து விடுறாங்க… குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த நெல்சன்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை ஐந்தாம் தேதி வெட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒரு மாநில தலைவருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதர்களுக்கு என்னாகுமோ என்று மக்கள் கொந்தளித்தனர்.

   

இந்த வழக்கில் 28 பேரை கைது செய்த போலீசார் சுமார் 200 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும் விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் திரைப்பட இயக்குனர் நெல்சனின் மனைவிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மொட்டை கிருஷ்ணனுக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. வெளிநாட்டில் தலைமறைவு ஆகி இருக்கும் மொட்டை கிருஷ்ணனிடம் நெல்சனின் மனைவி மோனிஷா போனில் பேசியதாகவும், 75 லட்சம் ரூபாய் பண பரிவர்த்தனை நடந்ததாகவும் கூறி நெல்சன் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது.

   

அதைத் தொடர்ந்து மொட்டைகிருஷ்ணனும் நெல்சன் மனைவி மோனிஷாவும் கல்லூரி காலத்திலிருந்து நண்பர்கள் என்பதால் நெல்சனையும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்சன் வீட்டில் தனிப்படை கொண்ட 5 போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர் எனவும் நேற்று செய்திகள் வெளியாயின.

 

இது சம்பந்தமாக இயக்குனர் நெல்சன் பத்திரிக்கையாளர்களுக்கு போன் செய்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியது என்னவென்றால், என் மீதும் என் மனைவி மீதும் அவதூறு பரப்புகிறார்கள். எங்களை போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை. எந்த வித விசாரணையும் நடைபெறவில்லை. அன்றைக்கு போனில் என் மனைவி மோனிஷா 30 செகண்ட் கூட பேசவில்லை. ஆனால் அதற்குள் இவ்வளவு பெரிய கதையை கட்டி விட்டார்கள்.

எங்களை போலீசார் விசாரித்தார்கள் என்றால் கண்டிப்பாக சம்மன் வந்திருக்கும் நாங்களும் விசாரணைக்கு போவோம் வருவோம் அதை வைத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அப்படி எதுவும் நடைபெறவில்லை. ஆம்ஸ்ட்ராங் வழக்கில் தேவையில்லாமல் என்னையும் என் மனைவி மோனிஷாவையும் உள்ள இழுத்து விடுறாங்க என்று கூறி தங்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேவையில்லாதது என மறுப்பு தெரிவித்துள்ளார் நெல்சன்.

More in NEWS

To Top