இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி யார் தெரியுதா?.. இவங்கதான் தென்னிந்தியாவின் கனவு கன்னி..!

By Nanthini on ஆவணி 25, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை திரிஷா. 40 வயதிலும் இளமை குறையாமல் இன்னும் 18 வயது போல காட்சியளிக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி, கமல் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் இவர் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

   

தற்போது மீண்டும் பிஸியாக திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷா ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். விஜயுடன் லியோ திரைப்படத்தில் நடித்த பின்னர் தற்போது அஜித்துடன் விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவில் திரிஷா தற்போது முன்னணி நடிகர் சிரஞ்சீவியுடன் விஸ்வாம்பரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

   

 

அதேசமயம் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்தில் திரிஷா இணைந்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. இறுதியாக பிருந்தா என்ற வெப் சீரிஸ் திரிஷா நடித்திருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த நிலையில் இணையத்தில் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் திரிஷாவுக்கு தனி ஒரு இடம் உள்ளது. அதன்படி தற்போது திரிஷாவின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.