பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு 1 மணியளவில் தனது சொந்த ஊருக்குத் திரும்பியபோது, அவரை வரவேற்க அவரது தந்தை ரயில் நிலையத்திற்கு வந்திருந்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக மட்டுமன்றி, தன் மகள் வருகிறாள் என்ற மகிழ்ச்சியில் நள்ளிரவு என்றும் பாராமல் அவர் காத்திருந்தது பலரது நெஞ்சங்களை நெகிழ வைத்துள்ளது.
ரயில் பிளாட்பாரத்திற்கு வந்து நின்றதும், தன் மகள் ரயிலின் வாசலில் நிற்பதைக் கண்ட தந்தை மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். முதலில் மகளின் பையை வாங்கிக் கொண்ட அவர், பின்னர் மகளை அன்போடு அணைத்து (Hug) வரவேற்றார். இந்த எதார்த்தமான அதேசமயம் உணர்ச்சிகரமான தருணம் வீடியோவாகப் படம்பிடிக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டது. பலருக்கு இது ஒரு சாதாரண நிகழ்வாகத் தோன்றினாலும், தந்தையின் அரவணைப்பு கிடைக்காதவர்களுக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாகத் தெரிகிறது.
View this post on Instagram
இந்த வீடியோ பகிரப்பட்ட சில நாட்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. குறிப்பாக, பெண் குழந்தைகள் தங்கள் தந்தையுடன் தங்களுக்கு இருக்கும் உறவைப் பற்றியும், அவர்கள் மீது தந்தை காட்டும் அக்கறையைப் பற்றியும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “தந்தையின் அன்பிற்கு ஈடு இணை ஏதுமில்லை” என்பதை மீண்டும் ஒருமுறை இந்த வீடியோ நிரூபித்துள்ளது.
