தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும் ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது சங்கீதா செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றும், அப்போது விஜய்க்கு எதிராகச் சில முக்கிய ஆதாரங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் பதற்றத்தையும், சங்கடத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அன்றைய தினம் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்க்க சங்கீதா முடிவெடுத்துள்ளதாகத் தற்போது வெளியாகி இருக்கும் தகவல் தவெக நிர்வாகிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில் இத்தகைய தனிப்பட்ட குடும்பப் பிரச்சனைகள் பொதுவெளியில் விவாதிக்கப்படுவது கட்சியின் செல்வாக்கைப் பாதிக்கும் என்று அஞ்சப்பட்ட நிலையில், சங்கீதாவின் இந்த திடீர் மனமாற்றம் கட்சிக்குச் சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது.
