FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 19, 2026

Spread the love

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த 5 நாட்களில் சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், அமெரிக்கா – ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இந்த கால அளவு இரண்டு வாரங்களாக அதிகரித்தது.

இதனால் தட்டுப்பாடு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு செய்ததால் விநியோகத்தில் கூடுதல் சுணக்கம் ஏற்பட்டது. இருப்பினும், தற்போது எண்ணெய் நிறுவனங்களில் 25 நாட்களுக்குத் தேவையான போதிய கையிருப்பு உள்ளதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதோடு, தேவையற்ற பீதியால் முன்பதிவு செய்வதை தவிர்க்குமாறு விடுத்த வேண்டுகோளை ஏற்று மக்கள் நிதானம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாக, எரிவாயு விநியோகம் பழைய நிலைக்குத் திரும்பி சீராக நடைபெற்று வருகிறது.