“ஒரே ஒரு தீப்பொறி..” மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட சோகம்… என் பிள்ளை கல்யாணத்தை எப்படி முடிப்பேன்..? மகளின் திருமணப் பணத்தைச் சாம்பலில் தேடும் தாய்…!!

By Soundarya on சித்திரை 19, 2026

Spread the love

லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. பலத்த காற்று மற்றும் குடிசைகளில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களால் தீ மளமளவென பரவி, சுமார் 200-க்கும் மேற்பட்ட குடிசைகளைச் சாம்பலாக்கியது. இந்த கோர விபத்தில் எதிர்பாராத விதமாக இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 இந்தத் தீ விபத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்திருந்த ₹1.5 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் நகைகள் தீயில் கருகிச் சாம்பலாகின. பல வருட உழைப்பையும், எதிர்காலக் கனவுகளையும் கண்முன்னே இழந்த அந்தப் பெண், சாம்பலாய் போன பணத்தைக் கண்டு கதறி அழுதது அங்கிருந்தோரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. பல குடும்பங்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இந்த விபத்தில் இழந்துள்ளனர்.

   

குடிசைகள் முழுவதுமாக எரிந்து போனதால், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து வீதியில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிக தங்குமிடம் மற்றும் உணவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு சிறிய தீப்பொறி ஒரு ஏழைக் குடும்பத்தின் மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.