BREAKING: துரைமுருகன் கைது…? முதல்வர் விஜயின் ஸ்கெட்ச்….  தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பு…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் சூட பிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவை ஊழல் வழக்குகளில் முடக்குவதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் அதிரடி வியூகங்களை வகுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே அன்பில் மகேஸ் சிக்கியதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக திமுகவின் மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனை இலக்கு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2023 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளில் சுமார் ரூ.4,700 கோடி மதிப்பிலான மணல் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை துரைமுருகன் மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து பலமுறை தீவிர சோதனைகளை நடத்தியது. அந்த சோதனைகளின் போது கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் சான்றுகளை அடிப்படையாக வைத்து, இடைத்தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ‘ஊழல் கட்சி’ என்ற முத்திரையைக் குத்த முதல்வர் விஜய் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறாராம்.

   

இடைத்தேர்தல் நேரத்தில் இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டித் துரைமுருகனைச் சிக்க வைப்பதன் மூலம், திமுகவின் முக்கியத் தூண்களைச் சாய்க்கத் தவெக திட்டமிட்டுள்ளது. முதல்வரின் இந்த அதிரடி நகர்வால் அமைச்சர் துரைமுருகன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கோட்டை வட்டாரத்திலும் திமுக முகாமிலும் பெரும் பரபரப்பும் கலக்கமும் தொற்றிக்கொண்டுள்ளது.