“கடந்த முறை 44… இப்போது 43…” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுவுக்கு பெரும் சிக்கல்… தேர்தல் களத்தில் வெடித்த பூகம்பம்…!!

By Devi Ramu on புரட்டாதி 17, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே களம் இறங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலுவின் வேட்புமனு வடிவில் மாபெரும் நெருக்கடி முளைத்துள்ளது.

வேட்புமனுப் பரிசீலனையின் போது, மரகதம் குமரவேலு சமர்ப்பித்த மனுவில் அவரது வயது மற்றும் வருமான வரி (IT) கணக்கு விவரங்களில் கடுமையான முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சியினர் தேர்தல் அதிகாரியிடம் அடுக்கடுக்கான புகார்களை அளித்துள்ளனர். கடந்த தேர்தலில் 44 வயது எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போதைய மனுவில் அவரது வயது 43 எனக் குறைத்துக் காட்டப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

அத்துடன் நில்லாமல், ஒரே நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கில் வெவ்வேறு தொகைகளைக் காண்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல் அதிகாரியிடம் அளிக்கப்பட்ட இந்த வழக்கால் மரகதம் குமரவேலுவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படுமா என்ற பயங்கரக் கலக்கம் தவெக தொண்டர்களிடையே பரவியுள்ளது. மதுராந்தகத்தில் வெடித்துள்ள இந்த வேட்புமனு சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் புயலையும் கிளப்பியுள்ளது.