சாதாரண குடும்பத்திலிருந்து வந்து பிக் பாஸ் பட்டத்தை வென்ற விவசாயி.. இதுவரை பிக் பாஸ் வரலாற்றில் நடைபெறாத நிகழ்வு.. யார் இந்த பிரசாத்..?

By Begam on மார்கழி 18, 2023

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளது. தற்பொழுது 12 போட்டியாளர்கள் மட்டுமே மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் யார் வெற்றியாளர் என்பதை அறிய ரசிகர்கள் தற்பொழுது ஆவலாக இருக்கின்றனர் .

   

பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கமே ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இதைத்தொடர்ந்து தான் தமிழ் மற்றும் தெலுங்கு என பல மொழிகளிலும் தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியானது ஒளிபரப்பட்டு வருகிறது. தமிழில் தற்போது நடைபெறும் பிக் பாஸ் சீசன் 7 போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.  இந்த தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார்.

   

 

View this post on Instagram

 

A post shared by MALLA OCHINA (@pallaviprashanth_)

 

இந்நிலையில் நேற்று தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் பைனல் நிகழ்ச்சி நேற்று நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியாளர்களாக பல்லவி பிரசாத் மற்றும் அமர்தீப் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

#image_title

யார் பிக் பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், பல்லவி பிரசாத் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு 35 லட்சம் ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டிருந்தது . தற்போது இவர் யார் என்பது  பற்றிய பேச்சு தான் இணையத்தில் ஹாட்டாக சென்று கொண்டிருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mr vinod (@vinod___edits)

தெலுங்கானாவில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து, கிராமத்தில் வளர்ந்தவர் பல்லவி பிரசாத். இவர் youtube சேனல் ஒன்றை தொடங்கி அதில் தனது அன்றாட வாழ்க்கை, விவசாய வேலைகளை பற்றி அதிகம் வீடியோக்களை பகிர்ந்து வந்துள்ளார்.  இதன்மூலம் சோசியல் மீடியாவில் பிரபலமான இவருக்கு  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து தனது விளையாட்டை மிகவும் சிறப்பாகவும், கவனமாகவும், நேர்த்தியாகவும் விளையாடி தற்பொழுது டைட்டிலை ஜெயித்துள்ளார் பல்லவி பிரசாத். பிக் பாஸ் வரலாற்றிலேயே ஒரு விவசாயிக்கு இந்த டைட்டில் கிடைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.