பிக் பாஸ் சீசன் 7-இல்  இரண்டாவது இடத்தை பிடித்த ஜீ தமிழ் சீரியல் நடிகையின் கணவர்.. குவியும் வாழ்த்துக்கள்..

By Begam on மார்கழி 18, 2023

Spread the love

தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளார் நடிகை தேஜஸ்வினி கவுடா. இவர் 2018ல் வீணா பொன்னப்பாவுடன் ‘பில் ஹிந்தி’ என்கிற கன்னட சீரியல் மூலமாகத்தான் முதன் முதலில் தொலைக்காட்சி நடிகையாக அறிமுகம் ஆனார்.

#image_title

விஜய் டிவியில் தற்பொழுது ஒளிபரப்பாக வரும் சீரியல்கள் எல்லாமே மக்கள் மத்தியில் பிரபலம் தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ என்ற சீரியலின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தேஜஸ்வினி கவுடா. இந்த தொடரில் அவர் நடிகர் வினோத் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

   
   

 

இதை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சி சீரியலின் மூலம் பிரபலமானார். இந்த சீரியலின் மூலம் கிடைத்த பிரபலத்தை கொண்டு இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘வித்யா நம்பர் ஒன்’ என்ற சீரியலில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாக ஓடி கொண்டுள்ளது. நடிகை தேஜஸ்வினி கவுடா கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமர்தீப் சவுத்ரி  என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை தேஜஸ்வினியின் கணவரான அமர்தீப் தெலுங்கு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். நடிகர் நாகார்ஜூனா தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் பைனல் நேற்று நடைபெற்றது. இதில் பைனலிஸ்ட்டாக அமர்தீப் மற்றும் பல்லவி பிரசாத் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட பல்லவி பிரசாத் வெற்றியாளராகவும், அமர்தீப் ரன்னராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்பொழுது அமர்தீப் அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.