“அதில் இருப்பது நான் இல்ல… யாரும் நம்பாதீர்கள்…” வைரலாகும் ஆபாச வீடியோ… கதறும் பிரபல யூடியூபர்…!!

By Devi Ramu on மார்கழி 19, 2025

Spread the love

இந்தியாவின் புகழ்பெற்ற பெண் யூடியூபரான பாயல் தாரே, இணையத்தில் தனது பெயரில் பரப்பப்படும் ஆபாசமான வீடியோ முற்றிலும் போலியானது என கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளார். ‘டீப்ஃபேக்’ எனும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனது முகத்தை மற்றொரு பெண்ணின் உடலில் பொருத்தியுள்ளதாகவும், இது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் சதி என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறான நபர்களால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் இந்த வீடியோவைப் பகிர வேண்டாம் என அவர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோ 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதாம். இந்த விவகாரம் தொடர்பாகத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ள பாயல், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தர சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். இணையவாசிகள் இதுபோன்ற போலித் தகவல்களை உண்மை என்று நம்பிப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தவறு செய்பவர்களுக்குக் கடுமையான சிறைத்தண்டனை கிடைக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   

 

View this post on Instagram

 

A post shared by Payal Dhare (@payalgamingg)