தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன காமெடி ரோலில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் எம்எஸ் பாஸ்கர். இவர் ஒரு டப்பிங் கலைஞர் என்பது பலரும் அறியாத விஷயம். பிறகு காமெடி நடிப்பில் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்ற எம்எஸ் பாஸ்கர் குணச்சித்திர நடிப்புக்கு மாறி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றார். சமீபத்தில் பார்க்கிங் படத்தில் நடித்ததற்கா சிறந்த துணை நடிகர் தேசிய விருது அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சில தினங்களுக்கு முன்பு சென்னை வியாசர்பாடியில் உள்ள எபிக் டொயாட்டோ கார் ஷோரூமிக்கு தன் குடும்பத்துடன் சென்ற நடிகர் எம்எஸ் பாஸ்கர் 2 புதிய கார்களை வாங்கியிருக்கிறார். இதில் ரூ. 46 லட்சம் மதிப்புள்ள டொயாட்டோ லெஜண்டா கார் மற்றும் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள ஒரு டொயோட்டா காரையும் வாங்கியிருக்கிறார். ஒரே நாளில் 2 டொயோட்டா கார்களை வாங்கிய நடிகர் எம்எஸ் பாஸ்கர் தனது மனைவி மகன் மகள் மற்றும் பேத்தியுடன் அந்த நிகழ்வை உற்சாகமாக கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
