தமிழ் சினிமாவில் மார்கண்டேயர் என அழைக்கப்படுபவர் சிவக்குமார். அவரது மகன்கள் நடிகர்கள் சூர்யா கார்த்தி என்பது அனைவருமே அறிந்த விஷயம்தான். இதில் நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். அதே போல் நடிகர் கார்த்தி, பெற்றோர் பார்த்து முடிவு செய்த உறவு முறையில் திருமணம் செய்துக்கொண்டார்.
கார்த்தியின் மனைவி பெயர் ரஞ்சனி. இந்த தம்பதிக்கு 2013ம் ஆண்டில் பிறந்தவர் தான் உமையாள். இவர்களது மூத்த மகள். பிறகு 2020ம் ஆண்டில் பிறந்த ஆண் குழந்தைக்கு கந்தன் என பெயர் சூட்டியிருக்கின்றனர். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தியுடன் அவரது மகள் உமையாளும் பங்கேற்றனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது படங்களில் ஹீரோயின்களுடன் டூயட் பாடிக்கொண்டு இருக்கும் கார்த்தியின் மகள்… இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டாரா என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
