உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில், அண்ணனுக்கும் தனது மனைவிக்கும் இடையே இருந்த தகாத உறவால் ஆத்திரமடைந்த தம்பி, சொந்த அண்ணனையே கோடரியால் வெட்டிக்கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதி அன்று கர்ரா கிராமத்தில் உள்ள வாய்க்காலில் ஹர்நாராயண் (எ) படாலம் என்பவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மூன்று நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கொலையாளி அவரது தம்பி என்பதைப் போலீஸார் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.
விசாரணையின் போது, தனது அண்ணனுக்கும் மனைவிக்கும் இடையிலான தவறான உறவே இந்தக் கொலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலையாளி கொடுத்த தகவலின் அடிப்படையில், கொலையச் செய்யப் பயன்படுத்தப்பட்ட கோடாரி மற்றும் இரத்தக் கறை படிந்த ஆடைகளை மீட்ட போலீஸார், அவரைச் சிறையில் அடைத்தனர்.
