ஐயோ கடவுளே..! “தவளை போல வீங்கிய முகம்” நீண்டகால பணிச்சுமையால் நேர்ந்த விபரீதம்… சமூக வலைதளங்களில் வைரல்..!!

By Soundarya on தை 3, 2026

Spread the love
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 48 வயதான ஜாங் என்ற கண்ணாடித் தொழிலாளி, தனது விசித்திரமான முகத் தோற்றத்திற்காகச் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். ஜாங்ஷானில் உள்ள கண்ணாடி உற்பத்தி நிறுவனத்தில் பணிபுரியும் இவர், கடந்த பல ஆண்டுகளாக 1,000 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தில் உருகிய கண்ணாடியை உலோகக் குழாய் மூலம் ஊதி வடிவமைக்கும் வேலையைச் செய்து வருகிறார். இடைவிடாத இந்த உழைப்பால் அவரது முகத் தசைகள் அசாதாரணமாக விரிவடைந்து, அவர் காற்றை ஊதும்போது கன்னங்கள் பலூன் போலப் பெருத்து விசித்திரமாகக் காணப்படுகின்றன.
அவரது இந்தத் தோற்றத்தைப் பார்த்து சக ஊழியர்கள் அவரை “பிக் மவுத் பிரதர்” என்று அழைக்கிறார்கள்; அவரோ தன்னை நகைச்சுவையாக “தவளை இளவரசர்” என்று குறிப்பிட்டுக்கொள்கிறார். தொடக்கத்தில் சாதாரண முகத்தோற்றம் கொண்டிருந்த இவருக்கு, நீண்ட காலப் பணிச் சுமையால் கன்னங்கள் தொய்வடைந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கடுமையான வெப்பத்திற்கு மத்தியிலும் சட்டை அணியாமல் உழைக்கும் இவரது காணொளி, ஒரு தொழிலாளியின் அர்ப்பணிப்பையும் அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.