தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்காக தேர்தல் ஆணையம் தொடங்கி கட்சி தொண்டர்கள் வரை அனைவரும் அயராது உழைத்து வருகிறார்கள். கூட்டணி கட்சிகளிடமும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் தேர்தல் நடவடிக்கைகள் குறித்து கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட தினகரன் தனியாக கட்சி தொடங்கிய நிலையில் ஓபிஎஸ் மற்றும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒன்றை தொடங்கினார்.
சசிகலாவின் அரசியல் முடிவு என்னவென்று தெரியாத நிலையில் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். இவ்வாறு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் நிலையில் NDA கூட்டணியிலிருந்து அடுத்தடுத்து விலகிய தினகரன் மற்றும் ஓபிஎஸ்யின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை என்னவென்று உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கலுக்கு முன்பு இவர்கள் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய வாய்ப்புள்ளது என தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்கு மண்டல அமைப்புச் செயலாளர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.
தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த திமுகவுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் இந்த பேச்சுவார்த்தையில் வேகம் எடுத்துள்ள திமுக இவர்கள் இருவருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்க உள்ளதாக கூறி கூட்டணி ஒப்புதல் வாங்கியதாக கூறப்படுகிறது. இ பி எஸ் இன் தலைமையை இவர்கள் இருவரும் ஏற்காத நிலையில், திமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு இடையே தான் போட்டி என்று கூறியதாலும் கடைசி நேரத்தில் திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றன. இவர்கள் இருவரின் மூலம் முக்குலத்தோர் வாக்குகள் மற்றும் தென் மாவட்டங்களின் வாக்குகளை கவரலாம் என்று நினைத்த செங்கோட்டையனுக்கு இந்த செய்தி அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
