நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. எச். வினோத் இந்த படத்தை இயக்கியுள்ள நிலையில் கே வி என் ப்ரொடக்ஷன் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், மமீதா பைஜூ என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த படம் நடிகர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. சினிமாவை விட்டு விலகும் விஜய் அடுத்ததாக முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார்.
அண்மையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்ற நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு பக்கா ட்ரீட்டாக இருக்கும் என்பது ட்ரெய்லர் மூலமே தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், காமெடி, சென்டிமெண்ட் என முழுக்க முழுக்க ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக ஒரு பக்கா கமர்சியல் படத்தை எடுத்திருக்கிறார் வினோத் என்பது ட்ரெய்லர் மூலமே நிரூபனம் ஆகிறது. ஜனநாயகன் ட்ரைலர் யூடியூபில் ட்ரெண்டாகி வருகிறது.
