2025 ஆம் ஆண்டின் முதல் சூப்பர் முன் இன்று அக்டோபர் 6 இரவு வானத்தை அலங்கரிக்க காத்திருக்கிறது. இந்த முழு நிலவு வழக்கத்தை விட கிட்டத்தட்ட 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் அதிக பிரகாசத்துடனும் வானில் ஒரு ராட்சசன் வந்து போல காட்சி அளிக்கும் என கூறப்படுகிறது. பூமிக்கு அருகில் நிலவு வரும் சமயத்தில் வழக்கமான அளவில் தெரியும் நிலவை விட கிட்டத்தட்ட 14 சதவீதம் பெரியதாகவும் 30 சதவீதம் கூடுதல் வெளிச்சத்துடனும் தெரியும். இதுதான் சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.
முழுநிலவு பௌர்ணமியாக இருக்கும் அதே சமயத்தில் அதன் சுற்றுப் பாதையில் பூமிக்கு மிக மிக அருகில் வரும் ஒரு தற்செயல் நிகழ்வு ஏற்படும் போது தான் சூப்பர் மூன் என அழைக்கப்படுகிறது. இதனை காண உங்களுக்கு விலை உயர்ந்த டெலஸ்கோப் எதுவும் தேவைப்படாது. வானம் இருட்டியதும் வெளியே சென்று நீங்கள் வானத்தை பார்த்தால் பிரகாசமான நிலவை இன்று உங்களால் காண முடியும். ஆனால் அனைத்து பௌர்ணமியிலும் இந்த சூப்பர் மூன் நிகழ்வது கிடையாது. அடுத்த சூப்பர் மூன் 2015 ஆம் ஆண்டு நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் நிகழவு உள்ளது.
