சற்றுமுன்: அவசர அவசரமாக சென்னை அப்போலோவிற்கு விரைந்த முதல்வர் ஸ்டாலின்…!

By Nanthini on ஐப்பசி 6, 2025

Spread the love

தலைமைச் செயலகத்திலிருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். அப்போலோவில் ஆஞ்சியோ செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன் பிறகு அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் ராமதாசை மருத்துவமனைக்குச் சென்று முதல்வர் நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.