“விஜய் முதலமைச்சராகும் நாளுக்காக வெயிட்டிங்” பதவியேற்பு விழாவிற்கு தயார்.. நக்கலாகப் பதிவிட்ட நடிகை வினோதினி..!!

By Soundarya on வைகாசி 2, 2026

Spread the love

நடிகை வினோதினி வைத்தியநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒரு கருத்து இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தவெக ஆட்சி அமைக்கும் என முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை (Exit Poll) சுட்டிக்காட்டிய வினோதினி, விஜய்யின் சிறப்பான 5 ஆண்டுகால ஆட்சியை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக நக்கலாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வரும் மே 7-ம் தேதி நடைபெறவுள்ள முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, தான் ஏற்கனவே வெள்ளைச் சட்டை மற்றும் காக்கி (beige) பேண்ட்டை ஆர்டர் செய்துவிட்டதாகவும் அவர் தனது எக்ஸ் (X) பக்கத்தில் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் வருகை குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், வினோதினியின் இந்த நக்கலான பதிவு வைரலாகி வருகிறது.