மும்பையில் தர்பூசணி சாப்பிட்டு ஒரு குடும்பமே உயிரிழந்ததாகக் கூறப்பட்ட அதிர்ச்சி வழக்கில் தற்போது ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த நான்கு பேரின் உடல்களையும் பரிசோதனை செய்ததில், அவர்களின் உடலில் ‘மார்ஃபின்’ (Morphine) என்ற வேதிப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்தப் பேரிழப்பிற்கு தர்பூசணி காரணமல்ல என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மருத்துவமனைகளில் தீவிர வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சக்திவாய்ந்த ‘மார்ஃபின்’, ஆரோக்கியமாக இருந்த அந்தக் குடும்பத்தினரின் உடலுக்குள் எப்படிச் சென்றது என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தர்பூசணியால் நேர்ந்த மரணம் என்று நினைத்த நிலையில், மருந்துப் பொருள் கலப்பால் மரணம் நிகழ்ந்திருப்பது இந்த வழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
