நிலக்கரியை எரிக்க வேண்டாம்.. “பூமிக்கு அடியிலேயே இனி ‘கரண்ட்’ எடுக்கலாம்” வியக்க வைக்கும் சீனாவின் புதிய தொழில்நுட்பம்..!!

By Soundarya on சித்திரை 27, 2026

Spread the love

நிலக்கரியிலிருந்து நேரடியாக மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் ‘பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு’ (Zero Carbon Emission) மின்கலனை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். வழக்கமாக நிலக்கரியை எரிப்பதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை விட, இது சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. நிலக்கரியைத் தோண்டி எடுத்து வெளியே கொண்டு வராமலேயே, அது இருக்கும் இடத்திலேயே மின்சாரமாக மாற்றுவதுதான் இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும்.

பூமிக்கு அடியில் சுமார் 2 கி.மீ. ஆழத்தில் உள்ள நிலக்கரி அடுக்குகள் வரை இந்த மின்கலன்களை இறக்கி, அங்கேயே மின்சாரத்தைத் தயாரிக்க முடியும். Electrochemical முறையில் உற்பத்தி செய்யப்படும் இந்த மின்சாரத்தை, மின்கம்பிகள் வழியாக நேரடியாகப் பூமிக்கு மேலே கொண்டு வர முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலக்கரிச் சுரங்கத் தொழில் மற்றும் மின் உற்பத்தியில் இது ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.