சோஞ்சனா குப்தா என்ற பெண் புனேவிலிருந்து மும்பைக்கு நேர்காணல் ஒன்றிற்க்கு வந்துள்ளார். 28 வயதான இவர் மீரா சாலையிலிருந்து அந்தேரிக்கு உள்ளூர் ரயிலில் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் இவர் பயணம் செய்ய ரேபிடோ பைக்கை முன்பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து நேர்காணலுக்காக ராபிடோ பைக்கில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் இருந்து ஒரு பைக் வந்துள்ளது. அப்போது ரேபிடோ ஓட்டுனர் தன்னுடைய வாகனத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் இரண்டு வாகனங்களும் மோதியதில் அந்தப் பெண் கீழே விழுந்துள்ளார். இதனால் அந்த பெண்ணின் கால் பைக்கில் சிக்கியதில் காலிலும், முகத்திலும் கடுமையாக காயம் அடைந்து ரத்தம் கொட்டியுள்ளது.
இதனை அடுத்து போலீசுக்கு தகவல் தெரிவித்து நிலையில் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளார்கள். விபத்துக்கு பிறகு அந்த பெண்ணின் பெற்றோர் புனேவிற்கு அவரை அழைத்து சென்றுள்ளார்கள். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கன்னத்தில் எட்டு தையல்கள் போடப்பட்டுள்ளது. அவருடைய தாடையும் உடைந்துள்ளது. இதனை அடுத்து சட்டவிரோத ரேபிடோ பைக்கில் அவற்றின் ஓட்டுநர்களின் மோசமான ஓட்டுனர் திறன், பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கு ஹெல்மெட் வழங்காதது குறித்து பல விவாதங்கள் தற்போது எழுந்துள்ளது.
