actor Vadivelu

விஜய்க்கு எதிராக இந்த முறை தேர்தல் களத்தில் இறக்கி விடப்படுகிறாரா வைகைப்புயல் வடிவேலு? திமுக போடும் ரூட்டுக்கு வடிவேலு ஓகே சொல்வாரா?

By Elango on மார்கழி 5, 2025

Spread the love

சமீபத்தில் நடிகர் வடிவேலு திமுக நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அமைச்சர்கள் சேகர் பாபு அன்பில் மகேஷ் மற்றும் அ ராசா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் கொட்டு மழையில் மழையை பிடித்த படி நடிகர் வடிவேலு திமுகவுக்கு ஆதரவான தனது கருத்துகளை தெரிவித்தார். அப்போது வடிவேலு பேசியதாவது, திமுக வருகிற 2026 தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும். அதில் மாற்றமே கிடையாது. மீண்டும் ஸ்டாலின்தான் முதல்வர், உதயநிதி தான் துணை முதல்வராக இருப்பார்கள். தமிழகத்தில் ஆட்சி நடத்துவார்கள்.

இங்குள்ள அமைச்சர்கள் எல்லாம் அரசியலை கரைத்து குடித்தவர்கள். அவர்களிடம் யாரும் ஜெயிக்க முடியாது. வருகிற தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி என்பது நிச்சயம். அதற்கு மேல் வருவது நமது லட்சியம் என்று கலகலப்பாக பேசினார். கடந்த முறை விஜயகாந்துக்கு எதிராக தேர்தல் களத்தில் இறக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு. அதனால் அவரது சினிமா கேரியரே பாதித்தது. இந்த முறை விஜய்க்கு எதிராக பேச அவரை திமுக வருகிற தேர்தல் களத்தில் இறக்கிவிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வடிவேலுவின் நையாண்டித்தனமான பேச்சு, தமிழக மக்களிடம் எடுபடுமா என்பதும் திமுகவுக்கு பெருவாரியான ஓட்டுகளை பெற்றுத் தருமா என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது.